பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மரணம்

  • 28 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை ravi prakash
Image caption மஹாஸ்வேதா தேவி

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதா தேவி, கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 90.

மேற்கு வங்கத்தை சேர்ந்த மகேஸ்வேதா தேவி, இந்தியாவின் பல முக்கிய இலக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் உயர அவர் எடுத்த முயற்சிகளுக்காகவும், வீடு, நிலங்களை இழந்த மக்களுக்காக அவரின் வெளிப்படையான ஆதரவுக்காகவும் மஹாஸ்வேதா தேவி பரவலாக பாராட்டப்பட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் போராட்டங்கள் குறித்து மஹாஸ்வேதா தேவி எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், மேற்குவங்கம் ''ஒரு புகழ்ப்பெற்ற தாயை'' இழந்து விட்டதாகவும், தான் தனது தனிப்பட்ட வழிகாட்டியை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.