புனே நகரில் கட்டட விபத்து; 8 பேர் பலி

Image caption கோப்புப்படம். 13-வது மாடியிலிருந்த சிமெண்ட பாளம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் சாவு

புனே நகரில், கட்டடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், தொழிலாளர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர்.

கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்த வளைவான சிமெண்ட் பாளம் ஒன்று இடிந்து, இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இடிபாடுகளுக்கு இடையில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என்று தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

தரம் குறைந்த பொருட்களின் பயன்பாடும், தரம் குன்றிய கட்டுமானங்களும் இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.