பெங்களூருவில் வெள்ளப்பெருக்கு (புகைப்படத் தொகுப்பு)

பெங்களூருவில் விடிய விடிய கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் மக்கள் வலை போட்டு மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் உடைப்பெடுத்து ஓடியது.

பெங்களூரு வெள்ளத்தால் தத்தளித்ததை காட்டும் புகைப்படத் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption தொடர் மழையால் முழங்கால் அளவு தண்ணீரில் செல்லும் குடியிருப்பு வாசிகள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption வெள்ளம் பெருகியுள்ள இடங்களில் மீட்பு பணிகளில் உதவிய தீயணைப்பு படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption தங்களின் செல்ல விலங்குகள் மற்றும் உடமைகளோடு வெளியேறும் குடியிருப்புவாசிகள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption மீட்புப் பணியின்போது, மகளை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் தந்தை
படத்தின் காப்புரிமை Getty
Image caption தேங்கி கிடக்கும் தண்ணீரை கிழித்து கொண்டு செல்லும் மோட்டார் வாகனங்கள்
படத்தின் காப்புரிமை Getty
Image caption 500-க்கு மேலான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. தெருக்களிலும், சாலைகளிலும் வெள்ளம் தேங்கி மக்கள் அவதி
படத்தின் காப்புரிமை Getty
Image caption பெங்களூரு, ராம்நகர், மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் இரவு முழவதும் தொடர்ந்து கன மழை பெய்தது
படத்தின் காப்புரிமை Getty
Image caption சர்வதேச விமான நிலைய சாலையில் 1.6 செ.மீ மழையும், பெங்களூரு நகரில் 4 செ.மீ மழையும் பெய்தது
படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆறு இடங்களில் பழைய கட்டிடங்களும், சாலையோரம் இருந்த 120 மரங்களும் சாய்ந்துள்ளன.
படத்தின் காப்புரிமை Getty
Image caption எலெக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாப்பூர் சாலை, ஓசூர் சாலைகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடியதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.