திரிபுராவில் எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியது சகஜ வாழ்க்கை

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்களை அதிகரித்துள்ளன. சகஜ வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

பள்ளிப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது. மக்கள் பல மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் முன்பு வரிசையில் நிற்கின்றனர்.

இந்தியாவின் பிற பகுதிகளுடன் திரிபுராவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை பருவமழையால் சேதமடைந்த காரணத்தால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான டீசல் மற்றும் பெட்ரோல் சரக்கு வாகனங்கள் திரிபுரவிற்குள் நுழைய முடியாமல் சாலைகளில் சிக்கித் தவிக்கின்றன.

பல அமைச்சர்கள் தங்கள் பணிக்கு நடந்தே போக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.