பாகிஸ்தான் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கோர திவ்யா ஸ்பந்தனா மறுப்பு

அண்டை நாடான பாகிஸ்தானைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தற்கு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையிலும், தனது கருத்தை மாற்றிக் கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook

அவரின் திரைப்பெயர் ரம்யா; இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்த பின், 'பாகிஸ்தான் நரகம் அல்ல, அங்குள்ள மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான்’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானை நரகத்துடன் ஒப்பிட்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் அவரின் கருத்து திகைக்க வைக்கும் அளவிற்கு உள்ளதாகவும், அவர் மீது தேசதுரோக குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.