மும்பையின் பிரபல தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைவதற்கான தடை ரத்து

மும்பையில் உள்ள பிரபல ஹாஜி அலி தர்காவில் புனித சமாதிக்குள் பெண்கள் நுழைய கூடாது என்ற தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஹாஜி அலி தர்கா வழிபட்டு தலத்தில் உள்ள தடையானது பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், அரசியல் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தடை கொண்டுவரபட்டது. ஆண் துறவிகளின் சமாதியை பெண்கள் தொட அனுமதிப்பது 'கடுமையான பாவம்'என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஹாஜி அலி தர்கா 15ஆம் நுற்றாண்டின் சூபி மத வழிபாட்டுத்தலம் ஆகும். இந்த தலத்தை நடத்திவரும் அறக்கட்டளை, மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சமீப மாதங்களில் இந்தியாவில் பெண்கள் நுழைவதை தடை செய்யும் இந்து மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள் எதிர்பாராத சட்ட சவால்களை சந்தித்து வருகின்றன.