சிங்கூர் நில சர்ச்சை: விவசாயிகளிடம் நிலத்தை திருப்பியளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டாட்டா நிறுவனம் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க, மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை bbc bangla
Image caption கையகப்படுத்தப்பட்ட நிலம்

சிங்கூர் நிலத்தை கையப்படுத்தியத்தில் தவறு உள்ளது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை 12 வாரங்களுக்குள், விவாசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, இந்த தீர்ப்புக்காக நாங்கள் பத்து வருடங்கள் காத்திருந்தோம். இந்த தீர்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கோப்புப் படம்

முன்னதாக, கடந்த 2006-ஆம் ஆண்டில், அப்போதைய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான இடதுசாரி அரசு நிலம் கையகப்படுத்துவதில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தது.

அந்த திட்டத்தின் கீழ் சிங்கூர் என்ற இடத்தில், டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியது.

இதை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். நில ஆக்கிரமிப்பு பகுதிக்கு விவசாயிகளுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.