தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image caption ஆளுநர் ரோசய்யா (கோப்புப் படம்)

புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை, அவர் தொடர்ந்து இந்தப் பொறுப்பை கவனிப்பார் என்று குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட கே. ரோசையா, நேற்றுடன் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குஜராத் மாநில ஆளுநரான ஓம் பிரகாஷ் கோலி, மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.