பச்சமுத்துவின் ஜாமீன் மனு தள்ளுபடி

பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனருமான பச்சமுத்துவின் ஜாமீன் மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை

அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை 11 ஆவது நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், பச்சமுத்துவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதே வழக்கில் தொடர்புடைய பல குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்பதாலும், பச்சமுத்து வெளியே விடப்பட்டால் முக்கிய சாட்சிகளை கலைத்துவிடக்கூடும் என்றும் கூறி அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பச்சமுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.