காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: இருவர் பலி

படத்தின் காப்புரிமை AP
Image caption கோப்புப்படம்

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட வெவ்வேறு மோதல்களில் இரு ஆண்கள் பலியாகி உள்ளனர்.

ஷோபியனில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாதுகாப்பு படையினர் வீசிய கண்ணிர் புகைக்குண்டு ஒன்று 20 வயதுடைய ஆணின் தலைமீது விழுந்து உயிரிழந்தார்.

மற்றொருவர், அனந்த்நாக் மாவட்டத்தில் பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார்.

இரண்டு மாதங்களுக்குமுன், நன்கு அறியப்பட்ட இளம் தீவிரவாத தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட செய்தி பரவியதை தொடர்ந்து புதிய வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

இதுவரை இந்த சம்பவங்களில் 70 பேர் வரை உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து, பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் தொலைத்தொடர்பிற்கு அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்