காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் கொளுத்தப்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் (காணொளி)

காவிரி விவகாரம்: கர்நாடகத்தில் கொளுத்தப்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் (காணொளி)

காவிரி நதிநீர் விவகாரத்தில், செப்டம்பர் 20 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இச்சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தமிழகத்திலும் இதே போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.