எது குறித்த செய்திகளை பிபிசி விசாரிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? விதிமுறையும், நிபந்தனையும்

நீங்கள் ஏதாவது கேள்வியை பரிந்துரை செய்து, பிபிசி செய்திப்பிரிவு அதை விசாரிக்க வேண்டும் என விரும்பினால் இந்தப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

உங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட மறந்துவிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் சமர்ப்பித்த கேள்வி தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள உதவும். நாங்கள் உங்களது மின்னஞ்சலை பொதுப்பார்வைக்கு வைக்கமாட்டோம்.

இந்த விசாரணைகளில் இருந்து திரட்டப்படும் தகவல்கள், செய்தியாக சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் பிபிசி நியூஸ் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள பிபிசி பக்கங்களிலும் வெளியிடப்படும்.

சில நேரங்களில், பிபிசிக்கு சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் முன்னிலையில் வைப்போம். அவர்கள் அளிக்கும் தர மதிப்பீடைப் பொறுத்து குறிப்பிட்ட கேள்விக்கு முன்னுரிமை கொடுத்து விசாரித்து செய்தி கட்டுரையை வழங்குவோம். தொடர்புடைய செய்தி பிரிவின் கீழ் மக்கள் அளிக்கும் மதிப்பீடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

உங்கள் கேள்வியுயடன் உங்களது பெயரையும் வெளியிடுவதை நீங்கள் விரும்புகிறீர்களா என்று உங்களிடம் கேட்கப்படும். உங்களது சுய விவரங்கள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பிபிசி உங்களது விவரங்களை அதிகபட்சமாக 12 மாதங்கள் வரை வைத்திருக்கும்.

பிபிசி உங்களது தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். இவற்றை பாதுகாப்பான மூன்றாம் தரப்பினருடன் பிபிசி தனி உரிமைக் கொள்கையின்படி மட்டுமே பகிர்ந்துகொள்ளும்.