எம்மைப் பற்றி

பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான தமிழோசை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.

தமிழோசை தகவல் துளிகள்:

  • 1941 மே 3 அன்று தமிழோசை தொடங்கியது
  • தமிழோசை அறுபது வயதை தாண்டிவிட்டது
  • வாரம் ஒரு முறை எனத் தொடங்கி, இப்போது தினசரி நிகழ்ச்சி வழங்கிவருகிறது
  • வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்த எமது நிகழ்ச்சி, எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என உருமாறி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக முன்னேற்றம் கண்டது.
  • தமிழகம் (தென்னிந்தியா), இலங்கை ஆகிய இடங்களில் எமது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.
  • வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறுஒலிபரப்புகள் மூலமாக கேட்டுவருகின்றனர்.