மாற்றுத்திறனாளிகளுக்கு…

இணையதளத்தை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பிபிசியின் கொள்கை

பார்வை, செவித்திறன், நரம்பு சம்பந்தப்பட்ட புலன் குறைபாடுடையவர்களும் பயன்படுத்தக்கூடிய விதமாக தமது ஊடகங்கள் இருப்பதை உறுதி செய்கிறது.

அக்ஸஸ்ஸிபிளிடி என்பது, பிபிசி போன்ற இணையதள தயாரிப்பாளர்களுக்கும் கணினி செயற்பாட்டு மென்பொருள், இணைய உதவிக் கருவிகள் போன்றவற்றின் தயாரிப்பாளர்களுக்கும் அல்லது சிறப்பு உதவிக்கான தொழில்நுட்ப தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும். உடற்திறன் குறைபாடுடைய பயன்பாட்டாளர்கள் செய்தி இணையதளங்களை எளிதில் பயன்படுத்துவதற்கு வகைசெய்வது என்பது இதன் நோக்கம் . உதாரணமாக படிப்பதற்கு எளிமையான வண்ணங்களும் பெரிய எழுத்துருக்களும் கொண்ட இணையதளங்களை வடிவமைப்பது அல்லது எழுத்துக்களை ஒலிவடிவில் வாசித்துக்காட்டும் வசதி கொண்ட இணையதளங்களை வடிவமைப்பது போன்றவற்றை கூறலாம்.

அகண்ட அலைக்கற்றை மற்றும் பல்லூடக செயற்பாடுகளை பிபிசி தொடர்ந்து மேம்படுத்தி வருவதால், காணொளிக்கான ஒலிக் குறிப்புக்கள், பெயர்கள் மற்றும் ஒலி விவரணைகள் அடங்கிய காணொளிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையிலான இணையதள வடிவமைப்பு தொடர்பான பிபிசி கொள்கைகள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

http://www.bbc.co.uk/accessibility/