மற்ற இணையதளங்களுக்கு இணைப்பு வழங்குவது தொடர்பிலான பிபிசியின் கொள்கை

எமது பக்கங்களில் இருந்து வெளியார் இணையதளங்களுக்கு இணைப்பு வழங்குவது தொடர்பான எமது கொள்கை பின்வருமாறு:

பிபிசி தமிழில் இணைப்பு வழங்கப்படும் இணையதளங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

பிபிசி இணைதளப் பக்கங்களில் இருந்து பிபிசியின் பிற பகுதிகளுக்கும் (பிபிசி அல்லாத) வெளியார் இணையதளங்களுக்கும் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. செய்தி அடிப்படையில் சம்பந்தப்பட்டுள்ள மற்றும் எமது பக்கத்துக்கு வரக்கூடிய நேயர்களுக்கு உகந்த வகையிலான இணையதளங்களையே நாங்கள் இணைப்பு வழங்குவதற்கு தேர்ந்தெடுக்கிறோம்.

இணைப்பு வழங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு, அவற்றில் பின்வருபவையும் அடங்கும்:

  • பொருத்தமான கூடுதல் விபரங்கள் மற்றும் செய்திக் கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்துள்ள ஆவணங்கள்,
  • பின்னணித் தகவல்கள்
  • பயனுள்ள நடைமுறை தகவல்கள்
  • சுவாரஸ்யம் அல்லது பொழுதுபோக்கு மதிப்பு கருதி
  • விஷய ஞானமுடைய கூடுதல் அபிப்பிராயங்கள்

கைமாறாக பணத்தையோ சேவைகளையோ பிற விஷயங்களையோ பெற்றுக்கொண்டு வெளியார் இணையதளங்களுக்கு நாங்கள் இணைப்புகள் வழங்குவதில்லை.

செய்தி அடிப்படையில் அவசியம் என்றால் மட்டுமே இணைப்பு வழங்குவோம். அவ்வாறு நாங்கள் வழங்குகின்ற இணைப்புகளையும் நேயர்கள் இலவசமாகவே பார்க்கக்கூடியதாக பெரும்பாலும் இருக்கும். அதிலுள்ள விஷயங்களைப் பார்ப்பதற்கு முன்பாக சிலவேளை அந்த இணையதளத்தில் நீங்கள் பதிவுசெய்துகொள்ள வேண்டி வரலாம்.

தமது இணையதளங்களுக்கு இணைப்பு தரச்சொல்லி கேட்கும் விண்ணப்பங்களை நாங்கள் ஏற்பதில்லை. செய்தி அடிப்படையில் எந்த அளவுக்குப் பொருத்தமாக உள்ளது என்பதை வைத்தே இணையதளங்களை மதிப்பீடு செய்து நாங்கள் இணைப்புகள் வழங்குகிறோம்.

இணைப்புகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு (தகவல்கள் ஆங்கிலத்தில்) இங்கே செல்லவும்:

http://www.bbc.co.uk/help/web/links/