புதிய வடிவில் பிபிசி தமிழ் இணையதளம்

பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை BBC World Service

பிபிசி தமிழ் இணையதள வாசகர்களே,

பிபிசி தமிழ் இணையதளம் புதிய வடிவில், புதுப்பொலிவுடன் வந்துள்ளது

எமது இணையப் பக்கங்கள் 800 பிக்செல் அகலத்திலிருந்து 1024 பிக்செல் அகலத்திற்கு உருமாறியுள்ளது

பிபிசியின் ஆங்கில செய்திப் பக்கங்களுக்கு ஒப்பான வடிவமைப்பையும் வசதிகளையும் பெற்றுள்ளது.

எமது புதிய இணையதளப் பக்கத்தில், முக்கிய செய்திகளுக்கு அதிக இடம் இருக்கும். தவிர படங்களுக்கு அதிக இடம் கிடைப்பதுடன், அவைகளின் நேர்த்தியும் துல்லியத்தன்மையும் மேம்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, உலகம், விளையாட்டு, அறிவியல், கலை & கலாச்சாரம் என பல்வேறு பகுப்புகளில் இனி நீங்கள் செய்திகளைக் காணமுடியும்.

அன்றன்றைய தமிழோசை நிகழ்ச்சியோடு ஒரு வார காலம் வரையில் முந்தைய நிகழ்ச்சிகளையும் நீங்கள் ஒலி வடிவில் கேட்கமுடியும்.

மேலும், எமது செய்திகளை, வாசகர்கள், தமது நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளும் வகையில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இணைய தள பக்கங்கள் குறித்து நேயர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம்.

நன்றி!