பகிர்தல் பற்றி

பகிர்தல் பற்றி

"இதைப் பகிர்க" மூலம் என்ன செய்ய முடியும்?

கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையதளத்தில் காணும் விஷயங்களை மற்றவர்களுடன் மின் அஞ்சல் வழியாகவோ சமூக வலைத்தளம் மூலமாகவோ நீங்கள் பகிர்ந்துகொள்ள இந்த சேவை வழிவகுக்கிறது.

மின் அஞ்சல் மூலம் "இதைப் பகிர்க" என்றால் என்ன?

கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையதளத்தில் பார்க்கும் ஒரு விஷயத்தை உங்கள் கைத்தொலைபேசியில் சேர்க்கப்பட்டுள்ள உங்களுடைய ஒரு மிஞ் அஞ்சல் சேவையின் மூலம் மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்ள வழிவகுப்பது இச்சேவை ஆகும்.

இச்சேவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையத்தில் நீங்கள் காணும் ஒரு பக்கத்தின் கீழ்ப் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் பொத்தானை சொடுக்கினால் உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள மின் அஞ்சல் சேவை வழியாக புதிய மின் அஞ்சல் அனுப்புவதற்கான பக்கம் ஒன்று திறக்கும். அப்போது உங்களுக்கு தேவையான ஆட்களின் மின் அஞ்சல் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு விவரமும் எழுதி குறிப்பிட்ட பிபிசி பக்கத்துக்கான இணைப்பையும் அனுப்பிவைக்க முடியும்.

இச்சேவை எனக்கு ஒழுங்காக வேலைசெய்யவில்லையே ஏன்?

உங்கள் கைத்தொலைபேசியில் மின் அஞ்சல் சேவையை நீங்கள் அமைத்துக்கொண்டிருத்தல் வேண்டும். அப்போதுதான் மின் அஞ்சலில் பகிர்வதென்பதை நீங்கள் செய்ய முடியும். உங்கள் கைத்தொலைபேசியில் மின் அஞ்சல் சேவையை அமைத்துக்கொள்வது எவ்வாறு என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் உங்கள் கைத்தொலைபேசியோடு வந்த விவர ஆவணங்களைப் படித்துப் பார்க்கவும்.

இச்சேவையைப் பயன்படுத்த என்ன செலவாகும்?

மின் அஞ்சல் வழியாக "இதைப் பகிர்க" சேவையைப் பயன்படுத்திக்கொள்ள பிபிசி உங்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், நீங்கள் பயன்படுத்தும் தரவின் அளவுக்கு ஏற்ப இணைய சேவை வழங்கும் நிறுவனம் உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும். உங்கள் கைத்தொலைபேசி இணைப்பில் தரவுக்கு என்ன விலை என்று தெரியாது என்றால் சேவை வழங்கும் நிறுவனத்தை தொடர்புகொள்ளவும்.

என்னுடைய விவரம் எதனையும் பிபிசி பதிந்துவைத்துக்கொள்ளுமா?

இல்லை. உங்களுடைய மின் அஞ்சல் கணக்கைத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதால் உங்களுடைய விவரம் எதுவுமோ நீங்கள் அனுப்புகின்ற செய்தியோ எங்களுக்குத் தெரியவராது. தனிநபர் விவரம் தொடர்பில் பிபிசியின் அணுகுமுறை பற்றி மேலும் அறிய Privacy & Cookies Policy பக்கத்தைக் காண்க.

ஃபேஸ்புக், டுவிட்டர் அல்லது பிற சமூகவைளைத்தளங்களில் "இதைப் பகிர்க" சேவை என்றால் என்ன?

கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையதளத்தில் இருந்து ஒரு விஷயத்தை உங்களது ஃபேஸ்புக் பக்கத்திலோ, டுவிட்டர் பக்கத்திலோ அல்லது பிற சமூக வலைத்தளங்களிலோ பகிர்ந்துகொள்ள வழிசெய்வது இச்சேவையாகும்.

இச்சேவையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையத்தில் நீங்கள் காணும் ஒரு பக்கத்தின் கீழ்ப் பாகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக் அல்லது டுவிட்டர் அல்லது பிற சமூக வலைத்தள பொத்தான்களில் ஒன்றை நீங்கள் சொடுக்கினால் குறிப்பிட்ட அந்த சமூக வலைத்தள பக்கத்துக்கு நீங்கள் கொண்டுசெல்லப்படுவீர்கள், அதில் நீங்கள் உங்கள் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்து நுழைந்து, செய்தி ஒன்றை எழுதி குறிப்பிட்ட பிபிசி பக்கத்தின் இணைப்பை பகிர்ந்துகொள்ள முடியும். டுவிட்டரிலோ, கூகுள்+ஸிலோ பகிரும்போது அந்த பக்கத்திலுள்ள ஒரு படமும் தானாகவே சேர்க்கப்பட்டிருக்கும்.

அவ்வாறு நீங்கள் பகிர்ந்த பக்கத்தின் இணைப்பு உங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் தோன்றும்.

சமூக வலைத்தளத்தில் நுழைவதற்கான உங்கள் கணக்கு விவரங்களை பிபிசிக்கு நான் வழங்க வேண்டி வருமா?

இல்லை. சமூக வலைத்தளத்துக்கான பொத்தானை நீங்கள் சொடுக்கியவுடன் நீங்கள் கைத்தொலைபேசி வடிவ பிபிசி இணையதளத்திலிருந்து வெளியில் கொண்டுசெல்லப்பட்டு, உங்கள் சமூக வலைத்தளத்தில் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்து நுழையும் பக்கத்தில் விடப்படுவீர்கள். எனவே உங்கள் கணக்கு விவரங்கள் பிபிசிக்கு ஒருபோதும் தெரியவராது.

சமூக வலைத்தளத்தில் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யும் நுழைவு வாயில் பக்கத்துக்கு போகாமலேயே நேரடியாக என்னுடைய கணக்கு பக்கத்துக்குள் நான் கொண்டுசெல்லப்படுவது ஏன்?

சில கைத்தொலைபேசிகளில் உங்கள் ஃபேஸ்புக் அல்லது டுவிட்டர் கணக்கு விவரங்கள் பதிந்துவைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருமுறையும் நீங்கள் கணக்கு விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

என்னுடைய விவரம் எதனையும் பிபிசி பதிந்துவைத்திருக்குமா?

இல்லை. பிபிசி இணையதளத்தில் இருந்து நீங்கள் வெளியில் கொண்டுசெல்லப்பட்டு, சமூக வளைத்தளத்தில் நீங்கள் உங்களுடைய கணக்கு விவரங்களை உள்ளீடு செய்கிறீர்கள் என்பதால் உங்களுடைய விவரமோ நீங்கள் எழுதும் செய்தியோ பிபிசிக்கு ஒருபோதும் தெரியவராது. தனிநபர் விவரம் தொடர்பில் பிபிசியின் அணுகுமுறை பற்றி மேலும் அறிய Privacy & Cookies Policy பக்கத்தைக் காண்க.