Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. நன்றி பிபிசி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

    கொரோனா குறித்த பிற பிபிசி செய்திகளை எப்படி படிப்பது?

  2. கொரேனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

    கொரேனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

    "கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. அது சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    "இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால், இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கான தடுப்பூசி தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன" என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

    கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இவ்வாறு முதன்முறையாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவானது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளன.

  3. இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    கொரோனா வைரஸ் தொடர்பாக இன்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளை உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

    1. பிஎம் கேர் நிவாரண நிதி திறட்டப்பட்டதில் கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராட 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த 3,100 கோடியில், சுமார் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்க ஒதுக்கப்படும்.
    2. கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மக்களுக்கான பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
    3. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும் உள்ளிட்ட 15 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.
    4. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த பொருளாதார உதவித் தொகுப்பு பல தொழில்கள் சந்திக்கும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    5. ஆயிரக்கணக்கான ஏழைகள், பசியால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான எந்த நிவாரணமும், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    6. கோயம்பேடு வியாபாரிகள், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    7. தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000த்தை கடந்துள்ளது.
    8. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களின் மூலம் ஒடிசா, ஹரியானா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
    9. அதேபோல இன்று திருநெல்வேலியிலிருந்து ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,420 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    10. உலகளவில் இதுவரை 42 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது.
  4. தமிழகத்துக்கு பாரபட்சம் - கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

    கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு முக்கியதுவம் அளிக்கும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

    ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள்,மீனவர்கள் என வாழ்வாதாரமின்றி தவித்து வரும் சுமார் 1000 பேருக்கு பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து கொரோனா நிவாரண பொருட்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்தி பேசும் மாநிலங்களின் நலனில் மட்டும் கவனம் செலுத்துகிறது. அதன் அடிப்படையில்தான் தமிழகத்துக்கு மிக குறைந்த கொரோனா நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் நல்ல உறவில் இருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழகத்திறக்கு கிடைக்க வேண்டிய ஜி.எஸ்டி நிலுவை தொகையை கூட பெற முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

    பொதுவாக மத்திய அரசு வட மாநிலங்களுக்கு மட்டும் முக்கியதுவம் அளிப்பதுடன், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிகிறது என குற்றம்சாட்டினார்.

    கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு என்பது தேவை ஆனால் பொருளாதாரம் பாதிக்காத அளவு ஊரடங்கை திட்டமிட்டுயிருக்க வேண்டும்.

    ஏற்கனவே, நலிவடைந்துள்ள இந்திய பொருளாதாரம் ஊரடங்கு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை திட்டமிட்ட அரசு அதனை எப்படி எதிர்நோக்க வேண்டும் என திட்டமிடவில்லை. தனி நபர்களுக்கும், தொழில் புரிபவர்களுக்கும் ஊரடங்கு காலத்துக்கு முன்பாகவே நிவாரண தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

  5. கொரோனாவால் மன அழுத்தமா? நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

    View more on youtube

    கொரோனா தொற்று காரணமாக நம் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நம் தினசரி வேலைகளிலும் பல்வேறு மாற்றங்கள். நாள் முழுக்க வீட்டிலேயே இருப்பதால் இரவு சரியாக தூங்க முடியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.

    ஊரடங்கு நிலையில் வீட்டில் இருந்தபடியே சரியான நேரத்தில் தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்

  6. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவிக்கும் பிரேசில்

    கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர தவிக்கும் பிரேசில்

    இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகளவிலான உயிரிழப்புகள் பிரேசிலில் பதிவாகியுள்ளது.

    செவ்வாய்க்கிழமையன்று மட்டும் அங்கு 881 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,400ஆக உயர்ந்துள்ளது.

    லத்தீன் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக இருக்கும் பிரேசில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் உலகளவில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

    அங்கு முறையான பரிசோதனை வசதிகள் இல்லாததால் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தரவுகளைவிட அதிகமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    "பிரேசிலில் மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது" என சா பாலோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் டொமிங்கோ ஆல்வ்ஸ் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

    "இருக்கும் தரவுகளை வைத்து ,இங்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வது கடினம். இத்தொற்று பரவலை கட்டுப்படுத்த எங்களிடம் எந்தக் கொள்கையும் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.

    பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ தரவுகளைவிட 15 மடங்கு அதிகம் இருக்கும் என்று கணித்தவர்களில் டொமிங்கோவும் ஒருவர்.

    தற்போது வரை அங்கு கொரோனா தொற்றால் 1,77,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

  7. எடப்பாடி பழனிசாமி

    "வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். நாங்கள் இங்கேதான் செய்வோம் என்று சொல்லிவிட்டார்கள். வேறு பகுதிகளுக்கு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்றார்கள்."

    மேலும் படிக்க
    next
  8. வந்துகொண்டிருக்கும் செய்திபிஎம் கேர் நிதியில் இருந்து கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராட 3,100 கோடி

    பிஎம் கேர் நிவாரண நிதி திறட்டப்பட்டதில் கோவிட் 19 தொற்றுக்கு எதிராக போராட 3,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த 3,100 கோடியில், சுமார் 2000 கோடி ரூபாய் வென்டிலேட்டர்கள் வாங்க ஒதுக்கப்படும்.

    வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக 1000 கோடி ரூபாயும், தடுப்பூசி மேம்பாட்டிற்கு உதவ 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    View more on twitter
  9. தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

    தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்
    தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்
    தமிழகத்தில் இருந்து சொந்த ஊர் புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3000க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்களின் மூலம் ஒடிசா, ஹரியானா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதேபோல இன்று திருநெல்வேலியிலிருந்து ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,420 பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டும் இரண்டாவது சிறப்பு ரயில் இது . நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு உணவு, தண்ணீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

  10. பிபிசி தமிழின் வாதம் விவாதம்

    பிபிசி தமிழின் வாதம் விவாதம்

    'சுயசார்பு பாரதம்' - 20 லட்சம் கோடி ரூபாய் உதவி தொகுப்பு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகள் இந்தியாவின் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவுமா?

  11. தமிழகத்தில் கொரோனா - விரிவான தகவல்கள்

    தமிழகத்தில் கொரோனா - விரிவான தகவல்கள்

    தமிழ்நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227ஆக உயர்ந்துள்ளது.

    சென்னையில் மட்டும் 380 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோயால் தமிழ்நாட்டில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 6984 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

    உயிரிழந்தவர்களைப் பொறுத்தவரை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 41 வயது நபர் உயிரிழந்தார். இவருக்கு நீரிழிவு நோய் இருந்துவந்த நிலையில், மூச்சுத் திணறலால் அவர் உயிரிழந்தார்.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு நபர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிமோனியாவால் உயிரிழந்தார். 43 வயதான இவருக்கும் நீரிழிவு நோய் இருந்தது.

    ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தத்துடன் சிகிச்சைபெற்று வந்த 48 வயது நபர், நிமோனியா, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் உயிரிழந்தார்.

    கடந்த 24 மணி நேரத்தில் 12,780 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 380 பேருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 25 பேருக்கும் திருவண்ணாமலையில் 23 பேருக்கும் கடலூரில் 17 பேருக்கும் இன்று நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

    கோயம்புத்தூரில் சிகிச்சைபெற்று வந்த கடைசி நோயாளி வீடு திரும்பியதால், அங்கு தற்போது கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை. கோவை தவிர, ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.

  12. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000த்தை கடந்துள்ளது.

    மொத்தம் 6,894 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

  13. கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

    கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

    கொரோனா வைரஸ் தொடர்பான பிபிசி தமிழின் இந்த நேரலையில் தற்போதுதான் இணைகிறீர்களா? கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    1. கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக மக்களுக்கான பொருளாதார உதவித் தொகுப்பு குறித்த விவரங்களை நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
    2. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கடன்களின் காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வணிகம் செய்யும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் 31 வரை இந்தக் கடன் வழங்கப்படும் உள்ளிட்ட 15 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.
    3. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த பொருளாதார உதவித் தொகுப்பு பல தொழில்கள் சந்திக்கும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
    4. ஆயிரக்கணக்கான ஏழைகள், பசியால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான எந்த நிவாரணமும், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    5. கோயம்பேடு வியாபாரிகள், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
    6. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    7. தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது நாமக்கலும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
  14. சிறு, குறுத் தொழில்களுக்கு உதவி - பிரதமர் மோதி வரவேற்பு

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த பொருளாதார உதவித் தொகுப்பு பல தொழில்கள் சந்திக்கும், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    அவர் அறிவித்திருக்கும் நிவாரணங்கள், பணப்புழக்கத்தை அதிகரித்து, தொழில் முனைவோரை ஊக்குவிக்க உதவும் என்றும் மோதி குறிப்பிட்டுள்ளார்.

    View more on twitter
  15. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

    கோயம்பேடு வியாபாரிகள், அரசின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால்தான் மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  16. உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்கப்படும்

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இணையதளம் வழியாக கடன் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கவுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    1,600 முதல் 2000 கோடி ரூபாய் மதிப்பில், தொழில் நடத்தும் சுமார் 36,000 பேருக்கு கடன் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு கடன் வழங்க 3 லட்சம் கோடி அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.

    View more on twitter
  17. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

    ஆயிரக்கணக்கான ஏழைகள், பசியால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கான எந்த நிவாரணமும், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதில் குறிப்பிடப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    நாட்டின் அடிதட்டு மக்களுக்கு எப்படி இந்த அரசு பணம் செலுத்தப் போகிறது என்பது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    View more on twitter
  18. முரளிதரன் காசி விஸ்வநாதன்

    பிபிசி தமிழ்

    இந்தியப் பிரதமர் இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் பிரதமரா?

    "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மகாராஷ்டிராவிலும் தமிழ்நாட்டிலும், குஜராத்திலும்தான் அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பேசப்படாத ஒரு மொழியில் பிரதமர் பேசுவது, அவருக்கு ஆங்கிலத்தில் பேச விருப்பமில்லை என்பதையே காட்டுகிறது."

    மேலும் படிக்க
    next
  19. 'பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து ஏற்பாடு'

    'பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து ஏற்பாடு'

    தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்களை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என தெரிவித்தார்.

    மேலும், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வகுப்பறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  20. கோவையை தொடர்ந்து நாமக்கலும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகியது

    தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது நாமக்கலும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 77 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 61 பேர் கடந்த சில நாட்களில் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர்.

    இந்த நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இதனால், நாமக்கல் மாவட்டம் கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. குணமடைந்தவர்களை நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கி அனுப்பி வைத்தனர்.

பக்கம் 1 இல் 4