Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

முக்கிய சாராம்சம்

  1. வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது
  2. எட்டு மக்களவைத் தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது
  3. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது
  4. இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானிக்கும் தேர்தல்.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் சிவபதியை விட 4,03,518 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    பாரிவேந்தர்
  2. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி

    திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன், அதிமுக வேட்பாளர் ஆனந்தனை விட 93,368 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

  3. திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

    திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட 4,59,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    திருநாவுக்கரசர்
  4. ஆரணி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

    ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், அதிமுக வேட்பாளர் ஏழுமலையை விட 2,30,806 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

  5. நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொமதேக வேட்பாளர் வெற்றி

    நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் சின்ராசு, அதிமுக வேட்பாளர் காளியப்பனை விட 2,65,151 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

  6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம், அதிமுக வேட்பாளர் மரகதத்தை விட 2,86,632 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

  7. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

    கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி, தேமுதிக வேட்பாளர் சுதீஷை விட 3,99,919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

  8. சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

    சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், திமுக வேட்பாளர் சீனிவாசனை விட 1,101 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  9. திருப்போரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

    திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் இதயவர்மன், அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 21,013 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  10. சோளிங்கர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

    சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத், திமுக வேட்பாளர் அசோகனை விட 16,056 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  11. மீண்டும் பின்தங்கிய தொல்.திருமாவளவன்

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் பின்தங்கியுள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலை பெற்றுள்ளார்.

  12. குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் அதிமுக வேட்பாளர் மூர்த்தியைவிட 27841 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

  13. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி - திமுக வேட்பாளர் வெற்றி

    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுகவின் சார்பாக போட்டியிட்ட அண்ணாதுரை தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை விட 3,04,187 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறுள்ளார்.

  14. ஈரோடு மக்களவைத் தொகுதி - மதிமுக வேட்பாளர் வெற்றி

    ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிமாறனை விட 2,10,618 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெறுள்ளார்.

  15. விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி

    விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளர் ஜெயக்குமாரை விட 28,554 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  16. “தேர்தல் முடிவுகளை மாற்ற எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி” - மு.க. ஸ்டாலின்

    தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை பெருவாரியான இடங்களில் வெற்றிபெற செய்ததற்கு மக்கள், திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னையிலுள்ள திமுக கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்னும் சில தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. அவற்றில் தோற்றுவிட்டால் தங்களது ஆட்சி பறிபோகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, ஆளும் கட்சியினர் தேர்தல் முடிவுகளில் சூழ்ச்சி செய்து வெற்றி பெற முயற்சிக்க கூடும் என்பதால், இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ளோம்” என்று ஸ்டாலின் கூறினார்.

    அதுமட்டுமின்றி, திமுகவின் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதி தங்களது வெற்றியை பார்ப்பதற்கு இல்லை என்பது வருத்தத்திற்கு உட்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

    ஸ்டாலின்
  17. ஆம்பூர் - திமுக வேட்பாளர் வெற்றி

    ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.சி.வில்வாநாதன், அதிமுகவின் ஜோதி ராமலிங்கத்தைவிட 37,767 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  18. நீலகிரி மக்களவைத் தொகுதி - திமுக வேட்பாளர் ஆ. ராசா வெற்றி

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுகவின் சார்பாக போட்டியிட்ட ஆ. ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட 2,05,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஆ.ராசா
  19. தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்

    திமுக - 13 தொகுதிகள்

    1. ஆம்பூர்

    2. ஆண்டிப்பட்டி

    3. குடியாத்தம்

    4. ஒட்டப்பிடாரம்

    5. பெரம்பூர்

    6. பெரியகுளம்

    7. பூந்தமல்லி

    8. தஞ்சாவூர்

    9. அரவக்குறிச்சி

    10. திருப்பரங்குன்றம்

    11. திருப்போரூர்

    12. திருவாரூர்

    13. ஓசூர்

    அதிமுக - 9 தொகுதிகள்

    1. அரூர்

    2. மானாமதுரை

    3. நிலக்கோட்டை

    4. பரமக்குடி

    5. பாப்பிரெட்டிப்பட்டி

    6. சாத்தூர்

    7. சோளிங்கர்

    8. சூலூர்

    9. விளாத்திக்குளம்

  20. "மோதி வெற்றி; இந்தியா தோல்வி"

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, தாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால், தவறான கொள்கையை கொண்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

    “இது மோதியின் வெற்றி; இந்தியாவின் தோல்வி. நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, நாட்டிலுள்ள மக்கள் எப்படி வழிபட வேண்டும், எதை உண்ண வேண்டும், எந்த மொழியை பேச வேண்டும் என்பதை தவறான கொள்கையை கொண்ட கட்சியே முடிவு செய்யப் போகிறது என்பதை நினைத்தால் அச்சம் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.

    திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் நாங்கள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். தவறான கொள்கையை கொண்ட பாஜகவுடன் சேர்ந்து செயல்பட்ட அதிமுக, பாமக போன்ற கட்சிகளுக்கு மக்கள் தகுந்த தண்டனை அளித்துள்ளனர்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.