Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

 1. பட்ஜெட் - பிரதமர் நரேந்திர மோதி வரவேற்பு

  இந்த பட்ஜெட்டை பிரதமர் நரேந்திர மோதி வரவேற்றுள்ளார். இது நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது என்றும் தொழில் முனைவோரை வலுப்படுத்தும் என்றும் இது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 2. பெட்ரோல் மற்றும் டீசல்

  பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுகிறது.

 3. தங்கம் மீதான கலால் வரி உயர்வு

  தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த கனிமங்கள் மீதான கலால் வரி 10%இல் இருந்து12.5%ஆக உயர்த்தப்படுகிறது

 4. சர்சார்ஜ் உயர்வு

  இரண்டு கோடி முதல் ஐந்து கோடி மற்றும் ஐந்து கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் உள்ளவர்களுக்கு சர்சார்ஜ் முறையே 3% மற்றும் 7% ஆக உயர்த்தப்படுகிறது.

 5. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் அட்டை

  120 கோடிக்கும் மேலான இந்தியர்களிடம் ஆதார் அட்டை உள்ளது. பான் அட்டை இல்லாதவர்கள் ஆதார் எண்ணை தெரிவித்து வரிகளை செலுத்தலாம்.மேலும், பான் கார்டு தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.

  View more on twitter
 6. பட்ஜெட் - வேறு என்ன?

  குடியிருப்பு கட்டங்களை விற்று அதை தொழில் தொடங்க முதலீடு செய்பவர்களுக்கு, மூலதனத்தின் மீதான லாபம் மீது விதிக்கப்படும் வரியில் இருந்து மார்ச்31, 2021 வரை விலக்கு அளிக்கப்படும்.

  ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 2019-2020இல் 1,05,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

 7. "யானை புகுந்த நிலம்" - புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

  பிசிராந்தையார் பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை வழங்கிய

  "காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

  மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

  நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

  வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

  அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

  கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

  மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

  வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

  பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

  10 யானை புக்க புலம்போலத்

  தானும் உண்ணான் உலகமும் கெடுமே."

  எனும் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டினார்

  பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அளிக்கப்பட்ட அறிவுரையை அரசாங்கம் ஏற்கிறது என்று நிர்மலா குறிப்பிட்டார்.

  இந்த பாடலுக்கு அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமும் அளித்தார்.

  “வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்."அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு 'யானை புக்க புலம்' போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் என நிர்மலா குறிப்பிட்டார்.

  நேரடி வரி வருவாய்

  2013-14இல் 6.38 லட்சம் கோடியில் இருந்து 2018-19இல் 11.37 லட்சம் கோடியாக இந்தியாவின் நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் இது 78% வளர்ச்சி.

  இரண்டு முதல் 250 கோடி ரூபாய் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே 25% வரி எனும் கார்ப்பரேட் விகிதத்தின் உச்ச அளவு, 250 கோடி ரூபாயில் இருந்து 400 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இது 99.3% நிறுவனங்களை உள்ளடக்கும்.

 8. புதிய 20 ரூபாய் நாணயங்கள்

  மக்களின் பயன்பாட்டிற்கு புதிய வரிசையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும். இந்த நாணயங்கள் பார்வையற்றோர் எளிதில் இனம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

 9. உலகின் குறைவான விகிதங்களை கொண்டுள்ள நாடு

  இந்தியாவின் வெளிநாட்டு கடன் மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையேயான விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது. இது உலகின் குறைவான விகிதங்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.

  View more on twitter
 10. பட்ஜெட் - சில முக்கிய அம்சங்கள்

  • உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
  • பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம்1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
  • வங்கிகளின் உள்நாட்டு கடன் வளர்ச்சி விகிதம்13.8% அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • இந்தியபாஸ்போர்ட்வைத்திருக்கும்என்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வாழும் இந்தியர் )இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும். வழக்கமான 180 நாள் காத்திருப்பு தேவையில்லை
  • தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் மகாத்மா காந்தி குறித்த 'காந்திப்பீடியா' ஒன்றை உருவாக்கி வருகிறது
 11. பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய்

  பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மூலதனமாக வழங்கப்படும். இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்குவதை மேம்படுத்தும்

 12. இளைஞர்களே இந்தியாவின் வழிகாட்டிகள்

  நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்களே வருங்காலத்தில் இந்தியாவின் வழிகாட்டிகள்.பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா (பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிஅளிக்கப்படும்.

  செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்படும்

 13. பெண்கள் பங்களிப்பு

  நாடு முன்னேற்றம் அடைய பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்று அரசாங்கம் நினைக்கிறது.

  வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்.

  கடந்த தசாப்தத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பறியது. நாடாளுமன்றத்தில் 78 பெண் எம்பிக்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாக்களித்துள்ளனர்.

  ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு இருப்பைவிட அதிகமாக பணம் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

  பெண்களை தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்

  View more on twitter
 14. ‘கேலோ இந்தியா திட்டம்'

  விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கேலோ இந்தியா திட்டம்' அடுத்துவரும் ஆண்டுகளில் மேலும் விரிவாக்கப்படும்.

  கூடுதல் நிதி உருவாக்கப்பட்டு,நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் திட்டங்கள் உருவாக்கப்படும்.

  View more on twitter
 15. தண்ணீர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தப்படும்

  அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்படும்.

  தண்ணீர் வளங்கள், தண்ணீர் விநியோகம் மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

  2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

  View more on twitter
 16. தேசிய கல்வி கொள்கை

  இந்தியாவின் கல்வியை சர்வதேச தரத்தில் உயர்த்த அரசின் புதிய கல்விக் கொள்கை உதவும்.

  இந்தியாவில் பல துறைகளின் ஆய்வை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை செய்யவும் நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவப்படும்.

  வெவ்வேறு அமைச்சகங்கள் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும்.

  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 200 தலைச்சிறந்த கல்லூரிகளில், ஒன்று கூட இந்தியாவில் இல்லை. தற்போது இந்தியாவின் மூன்று கல்வி நிலையங்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

  வெளிநாட்டு மாணவர்களை இந்தியா வந்து படிக்க ஊக்குவிக்கும் வகையில், Study in India திட்டம் தொடங்கப்படும்.

 17. விண்வெளி சேவைகள்

  நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் எனும் புதிய பொதுத்துறை நிறுவனம் மூலம் விண்வெளி சேவைகளை இந்தியா உலகிற்கு சந்தைப்படுத்தும்

 18. 9.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன

  அக்டோபர் 2, 2014 முதல் 9.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சத்துக்கும் மேலான கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்டுள்ளது.

  95% நகரங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்டுள்ளது.

 19. வேளாண்துறைக்கு முக்கியத்துவம்

  வேளாண் துறையில் தொழில் முனைவோர் உருவாவது ஊக்குவிக்கப்படும். வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு கவன செலுத்தும்.

  திறன் மேம்பாடு மூலம் கிராமப்புற - வேளாண் துறையில்75,000தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

 20. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

  80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1,25,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.