டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளை தெரிந்து கொள்ள பிபிசி தமிழின் நேரலை பக்கத்தில் இணைந்திருங்கள். டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான செய்திகளும் இந்தப் பக்கத்தில் இடம்பெறும்.
வந்துகொண்டிருக்கும் செய்திஇந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய ஆண்கள் ஹாக்கி
அணி காலிறுதி போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப்
போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்திவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து
PEDRO PARDO/AFP via Getty ImagesCopyright: PEDRO PARDO/AFP via Getty Images
டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ வீழ்த்தியுள்ளார் சிந்து.
2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து.
கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை - அமைச்சர் சேகர் பாபு
ஆ. விஜயானந்த், சென்னையில் இருந்து
இந்து சமய
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் என்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில்
அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதற்காக அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை
வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலின்போது, `கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும்' என்ற வாக்குறுதியை தி.மு.க அளித்திருந்தது. இதையொட்டி அதற்கான நடவடிக்கைகளை
அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த 12 ஆம் தேதி கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர்
செய்தியாளர்களிடம் பேசியவர்,
` தமிழில் அர்ச்சனை
செய்வதற்கான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. தற்போது முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றபெயர்ப் பலகையை வைக்க உள்ளோம். அதில் அர்ச்சகர்களின் பெயர்கள், கைப்பேசி எண்கள் இடம்பெறும்' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ` அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் எடுக்க விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி
அளித்து அர்ச்சகராக்குவதற்கான முயற்சியை முதலமைச்சர் அனுமதியுடன் செயல்படுத்துவோம்' என்றார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர்
சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழாவில் பேசிய அவர்,
` தமிழ்நாட்டில்
அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது.முதல்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில்
அர்ச்சனை நடைபெறும். இதற்காக `அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட உள்ளது. முதலில் பெரிய கோயில்களில் இது
நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் சிறிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.
p k sekar babu facebook pageCopyright: p k sekar babu facebook page
ஐநா பாதுகாப்பு கவுன்சில்: ஆகஸ்டு மாதம் இந்தியா தலைமை
ஆகஸ்டு மாதத்துக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை உறுப்பு நாடுகள் இடையே சுழற்சி முறையில் மாறும்.
ஜூலை மாதம் பிரான்ஸ் தலைமை வகித்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக ஜனவரி 1, 2021 முதல் இந்தியா உள்ளது.
அந்தத் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம்
BBCCopyright: BBC
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டெர்லைட் இயங்க வழங்கப்பட்டு வந்த தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை சேமிக்கும் பணிகளுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சாரம், தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆலையில் இருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் ஊர்களுக்கு அனுப்பப்பட்ட பின் இதுவும் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழுக்கு தகவல்.
காந்தஹார் விமான நிலையம் மீது ராக்கெட் ஏவுகணை தாக்குதல்
Getty ImagesCopyright: Getty Images
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவ்விமான நிலைய முதன்மை அதிகாரி மசூத் பஸ்தூன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் போன்ற முக்கிய நகரங்களை சூந்ந்திருக்கிறது தாலிபன் படை. எனவே ஆப்கன் அரசு படைக்கும் தாலிபன்களுக்கும் மத்தியிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
டோக்யோ ஒலிம்பிக்: கால் இறுதியில் சதீஷ் குமார் தோல்வி
Getty ImagesCopyright: Getty Images
இந்தியா சார்பாக குத்துச் சண்டைப் போட்டியில் +91 கிலோ எடைப் பிரிவில் சதீஷ் குமார் விளையாடி வந்தார்.
இன்று காலை நடைபெற்ற +91 கிலோ எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில், சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.
ஐந்துக்கு பூஜ்ஜியம் என்கிற புள்ளிகள் கணக்கில் சதீஷ் குமார் தோல்வியைத் தழுவினார்.
இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ்' மூலம் இந்திய அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை, ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
பெகாசஸ் வேவு பார்ப்பு பற்றிய செய்திகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரணை வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
தமிழக, இந்திய மற்றும் சர்வதேச செய்திகளுடன் டோக்யோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான செய்திகளும் இந்தப் பக்கத்தில் இடம்பெறும்.
உங்களுக்காக செய்திகளைத் தொகுத்து வழங்குவோர் செய்தியாளர்கள் விக்னேஷ். அ மற்றும் கௌதமன் முராரி.
நேரடிச் செய்தி
இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே
இன்றைய நேரலை நிறைவடைகிறது
வணக்கம் நேயர்களே, பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.
பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.
வந்துகொண்டிருக்கும் செய்திஇந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி காலிறுதி போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வந்துகொண்டிருக்கும் செய்திவெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து
டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ வீழ்த்தியுள்ளார் சிந்து.
2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து.
கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை - அமைச்சர் சேகர் பாபு
ஆ. விஜயானந்த், சென்னையில் இருந்து
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் என்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதற்காக அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயர் பலகை வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, `கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும்' என்ற வாக்குறுதியை தி.மு.க அளித்திருந்தது. இதையொட்டி அதற்கான நடவடிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த 12 ஆம் தேதி கோயில்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள்குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ` தமிழில் அர்ச்சனை செய்வதற்கான பயிற்சியை அனைத்து அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் ஏற்கெனவே தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. தற்போது முக்கியமான 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றபெயர்ப் பலகையை வைக்க உள்ளோம். அதில் அர்ச்சகர்களின் பெயர்கள், கைப்பேசி எண்கள் இடம்பெறும்' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், ` அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் எடுக்க விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகராக்குவதற்கான முயற்சியை முதலமைச்சர் அனுமதியுடன் செயல்படுத்துவோம்' என்றார்.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ` தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது.முதல்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக `அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட உள்ளது. முதலில் பெரிய கோயில்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் சிறிய கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்: ஆகஸ்டு மாதம் இந்தியா தலைமை
ஆகஸ்டு மாதத்துக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை உறுப்பு நாடுகள் இடையே சுழற்சி முறையில் மாறும்.
ஜூலை மாதம் பிரான்ஸ் தலைமை வகித்தது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக ஜனவரி 1, 2021 முதல் இந்தியா உள்ளது.
அந்தத் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தம்
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க வழங்கப்பட்ட 3 மாத அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டெர்லைட் இயங்க வழங்கப்பட்டு வந்த தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை சேமிக்கும் பணிகளுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சாரம், தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆலையில் இருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் ஊர்களுக்கு அனுப்பப்பட்ட பின் இதுவும் நிறுத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழுக்கு தகவல்.
காந்தஹார் விமான நிலையம் மீது ராக்கெட் ஏவுகணை தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தஹாரில் உள்ள விமான நிலையத்தை, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகள் தாக்கி இருப்பதாக ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அவ்விமான நிலைய முதன்மை அதிகாரி மசூத் பஸ்தூன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் போன்ற முக்கிய நகரங்களை சூந்ந்திருக்கிறது தாலிபன் படை. எனவே ஆப்கன் அரசு படைக்கும் தாலிபன்களுக்கும் மத்தியிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.
டோக்யோ ஒலிம்பிக்: கால் இறுதியில் சதீஷ் குமார் தோல்வி
இந்தியா சார்பாக குத்துச் சண்டைப் போட்டியில் +91 கிலோ எடைப் பிரிவில் சதீஷ் குமார் விளையாடி வந்தார்.
இன்று காலை நடைபெற்ற +91 கிலோ எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில், சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.
ஐந்துக்கு பூஜ்ஜியம் என்கிற புள்ளிகள் கணக்கில் சதீஷ் குமார் தோல்வியைத் தழுவினார்.
உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் வழக்கு விசாரணை