தமிழக விவசாயிகளுடன் விஷால்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக விவசாயிகளுடன் விஷால்

  • 24 மார்ச் 2017

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

போராட்டக்களத்தில் விவசாயிகளுடன் பேசிய விஷால், பிரதமருக்கு அவர்களின் பிரச்சனைகள் குறித்து ஒரு கடிதத்தை அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 11 நாட்களாக தமிழக விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை நடத்தி அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை என்றார் விஷால். ''நடிகர்கள் விவசாயிகளின் பிரச்சனையை பேசினால் ஏதாவது தீர்வு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். பலருக்கும் உணவு கொடுக்கும் விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பணக்காரர்களுக்கு அதிக அளவிலான கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் என்ன சிக்கல்,'' என்று கேள்வி எழுப்பினர்.

கோவணம் கெத்தான உடை - இயக்குனர் பாண்டியராஜ்

விவசாயி கேட்பது பிச்சை அல்ல, உரிமை: பிரகாஷ்ராஜ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்