தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

குறைந்தது 18 வயதானவராக நீங்கள் இருக்க வேண்டும். வாக்களிப்பவராக நீங்கள் உங்களை பதிவு செய்திருந்தால் நீங்கள் வாக்களிக்கும் நிலையத்திற்கு செல்லலாம்.

வாக்குச் சாவடியை சென்றடைந்தவுடன், சிறிய குழுக்களாக நீங்கள் உள்ளே அனுப்பப்படுவீர்கள்.

உங்களுடைய முறை வருகிறபோது, உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் உங்களின் அடையாளத்தை சரிபார்ப்பார்.

இரண்டாவது அலுவலர் அழிந்துவிடாத மை கொண்டு உங்கள் விரலில் அடையாளம் வைப்பார்.

இதற்கு பிறகு, வாக்காளர் பதிவேட்டில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். இரண்டாவது வாக்குப்பதிவு அதிகாரி உங்களுக்கு கையெழுத்திடப்பட்ட வாக்காளர் சீட்டை வழங்குவார்.

மூன்றாவது அலுவலர் உங்கள் வாக்காளர் சீட்டை பெற்றுக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.

இப்போது உங்கள் வாக்கைப் பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள்.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு என்றால் என்ன?

தேர்தலில் போட்டியிடும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர்களும், அந்த பெயர்களுக்கு அருகில் அவர்களின் சின்னங்களும் வரிசையாக இந்த எந்திரத்தில் இருக்கும்.

வேட்பாளர்களின் பெயர் அந்த தொகுதியின் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

எழுத்தறிவில்லாத வேட்பாளருக்கு உதவும் வகையில் வேட்பாளர் பெயருக்குப் பக்கத்தில் அவரது அல்லது அவரது கட்சியின் சின்னம் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் வாக்குப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அடுத்ததாக இருக்கும் நீல நிற பொத்தானை ஒரு முறை அழுத்தவும்.

இதைச் செய்தவுடன் வாக்கு பதிவாகிவிட்டது என்று பொருளாகாது.

பீப் என்ற சத்தம் கேட்டு, அந்த எந்திரத்தின் விளக்கு அணைந்தால்தான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று பொருள்.

இப்போது நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :