ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கலாம் யோசனைக்கு மீனவர்கள் மாறுபட்ட கருத்துக்கள்

இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் தொடரும் நிலையில், கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது.

அப்துல் கலாம் அவர்களின் யோசனை தமது மீனவர்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தாது என்றும் இலங்கையின் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாசன் கூறுகிறார்.

ஆனால் இந்த யோசனை வரவேற்கத்தக்கது என்றும், இது ஆக்கபூர்வமான யோசனை என்றும் கூறுகிறார் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தேவதாஸ்.

இருதரப்பு கருத்துக்களையும் இங்கே கேட்கலாம்.