ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலையக தமிழ்க் கட்சிகளின் கூட்டு: தூரநோக்கு உண்டா?

இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில், ஆளும்கட்சியில் பங்காளிகளாக உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிரணியில் இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து ஒரே அணியாக போட்டியிடவுள்ளன.

இந்தக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மலையகத்தின் சிவில் சமூகம் எடுத்த அக்கறை பற்றியும் ஒட்டுமொத்த மலையகத்திலும் இப்படியான அரசியல் கூட்டணி ஏற்படுவது சாத்தியமா என்பது பற்றியும் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ. முத்துலிங்கம் அவர்களுடன் ஒரு ஆய்வு