"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக்சோல்ஹெய்ம்

இலங்கை போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட பேரழிவை தடுக்கும் நோக்கில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் வைத்த திட்டத்தை புலிகளின் தலைமை ஏற்கவில்லை என்று இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதர் எரிக் சோல்ஹெய்ம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்