ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'வலிகாமம் காணி சுவீகரிப்பு என்பது ஒரு இறுதியான முடிவல்ல' - அமைச்சர் டக்ளஸ்

  • 25 ஏப்ரல் 2013

வலிகாமம் காணி சுவீகரிப்பு என்பது ஒரு ஆரம்பக் கட்ட நடவடிக்கையே என்றும் அது குறித்து தான் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அந்தக் காணிகளுக்கான தேவை, அவை நிச்சயமாக சுவீகரிக்கப்படும் நிலையில், அந்த மக்களை எங்கு குடியேற்றுவது என்ற விடயம் மற்றும் அவர்களுக்கு ஒரு சந்தைவிலையில் நட்டஈடு வழங்குவது போன்ற விடயங்கள் குறித்து தான் ஜனாதிபதியிடம் பேசவிருப்பதாகவும், அதன் பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்காக பெறப்பட்ட காணிகளில் 75 வீதமானவற்றை அரசாங்கம் மக்களுக்கு திரும்ப கொடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.