ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கிரிக்கெட் வருமா?

Image caption இந்திய அணி அண்மையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

இந்தியாவின் விளையாட்டு அமைச்சகம் நாட்டின் தேசிய விளையாட்டுக் கொள்கையின் வரைவு நகலை தமது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் உள்ள அனைத்து விளையாட்டு அமைப்புகளும் அமைச்சகத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும், இல்லெயென்றால் அந்த விளையாட்டு அமைப்பின் அணியை இந்திய அணி என்று அழைக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதுவரை இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டு அமைச்சகத்திடம் தம்மை பதிவு செய்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள சூழலில், அப்படி செய்யாவிட்டால் கிரிக்கெட் வாரியத்தின் அணியை இந்திய அணி என்று அழைக்க முடியுமா என்று கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசின் வரைவு நகல் மற்றும் இதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருக்கும் சி எஸ் வைத்தியநாதன் அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.