ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொசுக்கடியால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த புதிய தரவு ஆய்வு மென்பொருள்

Image caption கொசுக்கடியால் பல நோய்கள் பரவுகின்றன.

மலேரியா, டெங்கி காய்ச்சல், யானைக்கால் நோய் போல கொசுக்கடியால் பரவுகின்ற நோய்களின் கட்டுப்பாட்டில் உதவக்கூடிய தகவல் தொழில்நுட்பக் கருவி ஒன்றை சி எஸ் ஐ ஆர் என்படும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரசாயன தொழில்நுட்ப மையம் உருவாக்கியுள்ளது.

ஐ ஐ சி டி எனப்படும் இந்த இந்திய ரசாயன தொழில்நுட்ப மையத்தின்பேராசிரியர் யு.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான குழு இதனை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய கருவிக்கு இந்திய சுகாதார அமைச்சின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், சோதனை முயற்சியாக முதலில் ஐந்து இந்திய மாநிலங்களில் இந்த கருவி பயன்படுத்தப்படவுள்ளது.

செல்ஃப் ஆர்கனைசிங் மேப் எனப்படுகின்ற இந்த டேட்டா மைனிங் கருவி பற்றி இதன் உருவாக்கத்தில் பங்காற்றிய முத்த தொழில்நுட்ப அதிகாரி கே.ஸ்ரீராம் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.