ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியப் படையினர் மரணம் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள்

  • 7 ஆகஸ்ட் 2013
Image caption ஏ கே அந்தோணி

செவ்வாய் கிழமையன்று, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இந்திய பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில், இடம்பெற்ற ஒரு தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் மீது இந்திய இராணுவம் பழி சுமத்தியது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, பாகிஸ்தான் படை சீருடைகளை அணிந்து வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் இந்த ஐவரும் கொல்லப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசு மாறுபட்ட தகவல்களை அளிப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

ஐ நா பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த சம்வம் நடந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் பாதுகாப்பு அமைச்சர் தனது வார்த்தைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வு அமைப்பான ஐ டி எஸ் ஏ வைச் சேர்ந்த ஆய்வாளர் கல்யாணராமன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்துள்ளது