"கோபுரம் மத அடையாளமாக அப்போது பார்க்கப்படவில்லை"

"கோபுரம் மத அடையாளமாக அப்போது பார்க்கப்படவில்லை"

தமிழக அரசின் முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது முதல்வராக இருந்த கு காமராஜர் காலத்தில்தான் இந்த கோபுரம் தமிழக அரசின் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. காமராஜர் மத நம்பிக்கையாளராக யாராலும் பார்க்கப்படவில்லை என்றும் அந்த கால கட்டத்தில் யாரும் இதை எதிர்க்கவில்லை என்றும் கூறுகிறார் ஆய்வாளர் எஸ் வி ராஜதுரை.