ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'எல்லைக் கோட்டால் பிரிந்திருக்கும் குடும்பங்கள்'

Image caption எல்லைக் கோட்டால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பம்

காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலையும், தாக்குதல்களும் எல்லையின் இரு புறத்திலும் கண்ணீரை அதிகரித்திருக்கிறது.

இரு நாடுகளின் பிரதமர்களும், ஐநா பொதுச்சபை சந்திப்பின் போது நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார்கள். அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அவர்கள் பேசக்கூடும்.

ஆனால், கடந்த பத்து வருடமாக இருக்கும் மோதல் நிறுத்தத்தை மீறி, இந்த வருடத்தில் அதிகரித்திருக்கும் ஷெல் தாக்குதல்களும் பதற்றமும், அங்கு எல்லையில் இருபுறமாகப் பிரிந்து கிடக்கும் உறவுகளின் சோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

அண்ணன் ஒரு புறம் தங்கை எல்லையின் மறுபுறம், கணவர் ஒருபுறம், மனைவி மறுபுறம் என்று பல கிராம மக்கள் எல்லைக் கோட்டால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது கிராமங்களும் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன.

அவர்கள் அனுபவிக்கும் சோகம் குறித்த செய்திப் பெட்டகம்.