ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கஷ்மீர் தாக்குதல் வீடியோ

இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில் காவல் நிலையம் மீதும், இராணுவ முகாம் மீதும் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்தியப் படையினர் கூறுகின்றனர்.

இராணுவச் சீருடை போன்ற உடையணிந்த ஆயுததாரிகள் முதலில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியதாகவும், அதன்பிறகு அவர்கள் பாகிஸ்தான் எல்லையருகே இருக்கும் இராணுவ முகாமைத் தாக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில், லெப்டினன்ட் கர்னல் ரேங்கில் இருக்கும் இந்திய இராணுவத்தின் 16 ஆவது கவசப்படையின் துணைத் தளபதி கொல்லப்பட்டதாகவும், இந்தப் படையணியின் கர்னல் சுடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளின் தாக்குதலில் மொத்தமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்