ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவின் அகதி முகாம் - காணொளி

இரசாயன ஆயுதம் என்று நம்பப்படும் ஒரு குண்டு சிரியாவில் வெடித்து அதில் பலர் பாதிக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி சில வாரங்களுக்கு முன்னதாக நாம் வெளியிட்டிருந்தோம்.

அங்கு சென்ற பிபிசி குழு தயாரித்த காணொளி அது.

அந்த இரசாயனக் குண்டால் பாதிக்கப்பட்டு உடலெல்லாம் வெந்துபோய் வந்த மக்களுக்கு இரண்டு பிரிட்டிஷ் டாக்டர்கள் மருத்துவ உதவி செய்ததையும் நாங்கள் அதில் கூறியிருந்தோம். அதில் பாதிக்கப்பட்டவர்களில் இன்றைய நிலைமை குறித்து அறிவதற்காக அங்கு அகதி முகாம்களுக்கு எமது குழு மீண்டும் சென்றது. அது குறித்த காணொளி இது.

(இவற்றில் சில காட்சிகள் மிகவும் அதிர்சியளிக்கக் கூடியதாக இருக்கலாம்.)