ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காமன்வெல்த் விளையாட்டு அஞ்சல் கோல் பயணத்தை தொடங்கியது

கிளாஸ்கோ 2014- காமன்வெல்த் விளையாட்டு விழாவை முன்னிட்டு உலகை வலம் வரவுள்ள காமன்வெல்த் அஞ்சல்(Baton) கோல்-இன் பயணத்தை பிரிட்டிஷ் மகாராணியார் தொடங்கிவைத்தார்.

டைட்டானியம், மரம் மற்றும் கிரானைட் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கையினால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோலை மகாராணியார் பிரிட்டனின் குறுந்தூர ஓட்ட வீரர் அலென் வெல்ஸிடம் ஒப்படைத்தார்.

நான்கு காமன்வெல்த் தங்கப் பதங்கங்களை வென்றுள்ள அலென் வெல்ஸ், 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்ட வீரராக பட்டம் வென்றவர்.

சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மைல்கள் தூரம் பயணிக்கவுள்ள காமன்வெல்த் கோல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்காட்லாந்தை வந்தடையும்.