ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புயலை எதிர்நோக்கி இந்தியா

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள்.

ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள்.

இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை தாங்கள் மேலதிகத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.