ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கலிபோர்னியாவில் கரையொதுங்கிய 14 அடி நீளமான மீன்

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில், விலாங்கு மீன் போன்ற தோற்றத்தைக் கொண்ட, 'ஓர்ஃபிஷ்'-(Oarfish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற மிகப்பெரிய மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளது. ஒரு வாரத்துக்கும் குறைவான காலப்பகுதியில் கரையொதுங்கியுள்ள இரண்டாவது மீன் இதுவாகும்.

ஓஷன்சைட் நகருக்கு அருகே உள்ள கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஒருவரே இந்த 14 அடி நீளமான இந்த மீன் கரையொதுங்கி இருந்ததைக் கண்டுள்ளார்.

கடந்த வாரம், 18 அடி நீளமான இன்னொரு ஓர்ஃபிஷ் மீன் சாண்டா கட்டலினா தீவில் கரையொதுங்கி இருந்தது.

இந்த ஒருவார காலப்பகுதிக்குள் இந்த இரண்டு பெரிய மீன்களும் கரையொதுங்கியதைப் போல இதற்கு முன்னர் நடந்தது இல்லை என்று தேசிய கடற்சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.