ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பும் இந்தியா' - பெட்டகம்

சமூக, பொருளாதார மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா வெகுவாகப் பின்தங்கியிருந்தாலும் ஒரு சில துறைகளில் அது வேகமாக வளர்ந்து வருகிறது.

அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்வெளித் துறையில் ஆசிய நாடு ஏதும் செல்லாத தூரத்துக்கு செல்ல முனைந்துள்ளது.

அடுத்த சில தினங்களில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் இந்திய ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ளது.

இந்தத் திட்டம் குறித்து இந்திய விணவெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் கே ராதகிருஷ்ணன் பிபிசியிடம் பேசுகையில் செவ்வாய்க்குச் சென்று அங்கு மீதேன் வாயு இருக்கின்றதா என்பதை ஆராய்வதே தமது நோக்கம் என்று கூறினார்.

அப்படி மீதேன் அங்கு இருந்தால் அது அங்கு உயிரினங்கள் இருந்ததற்கான ஆதாரமா என்றும் ஆராயப்படுமாம்.

இவை குறித்த சுவாமிநாதனின் செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.