ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் அக்கறை' - கமலேஷ் சர்மா

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கையையும் சேர்த்துச் செல்வதில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் சர்மா கூறுகிறார்.

அத்துடன், இலங்கைப் போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஒரு நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணை தேவை என்று ஐ நா கூறியிருப்பது யதார்த்த்த்துக்கு பொருந்தாத ஒரு விசயம் என்றும் கூறியுள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா அவர்கள், அது குறித்து தமக்கு நிலைப்பாடு எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் வழங்கிய செவ்வியின் ஒரு பகுதியை, தமிழில் நேயர்கள் இங்கு கேட்கலாம்.