ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 1000 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்'

  • 9 நவம்பர் 2013

பிலிப்பன்ஸை தாக்கிய தைப்பூன் ஹையான் என்னும் பெரும் சூறாவளியில் பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

லெய்தே என்னும் தீவின் தக்லோபான் என்னும் நகர் இந்த சூறாவளியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு மாத்திரம் நூறுபேர் வரை இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் இதில் இறந்திருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

சமர் மாகாணத்திலும் 200 பேர் வரை இறந்ததாகக் கூறப்படுகிண்றது.

இதற்கிடையே அரசாங்க அமைச்சர் ஒருவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தின் மூலம் சென்று பார்த்திருக்கிறார்.

இராணுவமும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வீதிகள் உடைந்தும் நீரில் மூழ்கியும் இருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சூறாவளியின் பாதிப்பு குறித்து பிலிப்பைன்ஸில் வாழும் தமிழரான புஸ்பாகரன் அவர்கள் பிபிசிக்கு வழங்கிய தகவல்களை இங்கு கேட்கலாம்.