ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐநாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில் புதிய உடன்பாடு ஏற்படுமா?

போலந்தின் தலைநகர் வார்ஸாவில் நேற்று (நவம்பர்12,2013) திங்கட்கிழமை துவங்கியிருக்கும் ஐநா மன்றத்தின் காலநிலைமாற்றம் தொடர்பிலான 19 ஆவது சர்வதேச மாநாட்டில் 190க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். நவம்பர் 22 ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்த ஐநா மாநாட்டில், புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான கியோடோ நடைமுறைக்கு மாற்றாக கொண்டுவரப்படவிருக்கும் புதிய சர்வதேச நடைமுறை குறித்து விரிவாக விவாதிக்கப்படவிருக்கிறது. ஏற்கெனவே இந்த புதிய நடைமுறை என்பது பொருளாதார ரீதியில் வளர்ந்துவிட்ட நாடுகளுக்கும், பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் இடையில் நிலவும் பிளவை மேலும் அதிகப்படுத்தும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத்துவங்கியிருக்கின்றன. இந்த பின்னணியில், இந்த மாநாட்டின் முக்கிய விவாதப்பொருள் என்னவாக அமைந்திருக்கும் என்பது குறித்தும், இதில் புதிய உடன்பாடுகள் எவையாவது எட்டப்படுமா என்பது குறித்தும் ஆராய்கிறார் தொடர்ச்சியாக ஐநா மன்றத்தின் பருவநிலை தொடர்பான சர்வதேச மாநாடுகளை கண்காணித்துவரும் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் கருணாகரன்.