கவிஞர் சேரன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கைப் போரும் இலக்கியமும் : கவிஞர் சேரன் செவ்வி

''இலங்கை இலக்கியம் போரினால் எந்த விதமானத் தாக்கங்களுக்கு உள்ளானது ? இனப் பிரச்சினை இலக்கியத்தை பயன்படுத்தியதா அல்லது இலக்கியம் இன அரசியலில் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியதா? இலங்கைத் தமிழ் மற்றும் சிங்கள இலக்கியவாதிகளிடையே, இனப் பிரச்சினை குறித்து என்ன விதமான ஊடாடல் இருந்தது? போர் முடிந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலக்கியவாதிகளின் பார்வை எப்படி இருக்கிறது ?''

இது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், இலங்கைக் கவிஞர் சேரன். சமீபத்தில் லண்டன் வந்தபோது பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த காணொளி பேட்டியிலிருந்து சில பகுதிகள்.