பர்மாவில் இருக்கும் தமிழர்களில் கணிசமானோருக்கு தமிழை படிக்கவும் எழுதவும் தெரியாது.
பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்பிக்கப்படாததாலும், தனியாக ஆசிரியரைவைத்து தமிழ் படிக்க வசதியில்லாததாலும் கடந்த 50 ஆண்டுகளுகளாக தமிழ் கற்பது அங்கே பெரிதும் குறைந்துவிட்டது.
இந்த நிலையைப் போக்க, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் பல தமிழ் பள்ளிக்கூடங்களைத் திறந்துள்ளனர்.
இராணுவ ஆட்சியின் போது பல கோயில்களில் சமயக் கல்வி தமிழில் கற்பிக்கப்பட்டது.
பலரால், பல இடங்களில் வேறுபட்ட நோக்கங்களுடன் ஆரம்பித்து நடத்தப்படும் தமிழ் பாடசாலைகள் அனைத்திலும், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றச் செய்ய வேண்டும், அவற்றின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.
அங்கு வீட்டில் பலர் தமிழ் பேசினாலும், இளவயதினர் பெரும்பாலும் பர்மிய மொழியில்தான் பேசுகின்றனர்.
தமிழ் மொழியை ஊக்குவிக்க பல முயற்சிகள் எடுக்கப்படுவதாக அதில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்கள் கூறினாலும், அதை முன்னெடுப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்
அங்கு இப்போது, இணையம் மூலமும் சிலர் தமிழ் படிக்க ஆரம்பித்துள்ளனர்
பர்மியத் தமிழர்களிடையே தமிழைக் கற்பதில் இருக்கும் ஆர்வம், அதில் இருக்கக்கூடியத் தடைகள் ஆகியவற்றை இந்தத் தொடரின் இப்பகுதியில் இங்கு கேட்கலாம்.