ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: மதுக்கடை மீது ஹெலிகாப்டர் விழுந்தது, 8 பேர் பலி

ஸ்காட்லாந்து நகரான கிளாஸ்கோவில் போலிஸ் ஹெலிகாப்டர் ஒன்று மதுக்கடை ஒன்றின் மீது விழுந்ததில் 8பேர் கொல்லப்பட்டனர்.

32 பேர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிளாஸ்கோ நகரில் க்ளைட் நதியருகே அமைந்திருக்கும் இந்த மதுக்கடை மீது வெள்ளிக்கிழமை இரவு இரண்டு போலிசார் மற்றும் ஒரு சிவிலியன் விமானியைக் கொண்ட இந்த போலிஸ் ஹெலிகாப்டர் விழுந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த ஹெலிகாப்டர் விழுந்தபோது, மதுக்கடையில், சுமார் 120 வாடிக்கையாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மீட்புப் பணியாளர்கள் இந்தக் கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை அணுக முயன்று வருகிறார்கள்.

மத்திய கிளாஸ்கோ பகுதி மீது பறந்துகொண்டிருந்த இந்த ஹெலிகாப்டர் , திடீரென்று ஒரு கல்லைப் போல விழுந்ததைத் தாங்கள் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஹெலிகாப்டர் விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெளிவாகவில்லை