'மலை முகடுகளில் மறைந்திருக்கும் திபெத்தின் அவலம்'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மலை முகடுகளில் மறைந்திருக்கும் திபெத்தின் அவலம்'

சீனாவுக்கான விஜயத்தின்போது அந்த நாட்டுடன், தொடர்புகளையும், வணிகத்தையும் அதிகரிக்கப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரன் கூறியுள்ளார்.

ஆனால், சீனாவின் திபெத்தியப் பகுதிகளில் மனித உரிமை நிலவரங்கள் மிகவும் மோசமடைந்துவருவதாக சில செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

சீன ஆட்சியின் தன்மைக்கு எதிரான போராட்டமாக கடந்த இரண்டு வருடங்களில் 120 திபெத்தியர்கள் தீக்குளித்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

சீனத் தலைவர்களிடம் கமெரன் அவர்கள் இந்த விவகாரத்தை வலியுறுத்தவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

அண்மைய வருடங்களில் திபெத்திய மலைப்பகுதிகளுக்கு சென்று செய்திகளைச் சேகரிக்க பல செய்தியாளர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், வழக்குத்துக்கு மாறாக அங்கு சென்று, செய்தி கூறும் வாய்ப்பை எமது பிபிசி செய்தியாளர் ஒருவர் பெற்றிருக்கிறார். அது குறித்த காணொளி.