ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: மண்டேலா இல்லம் முன்பாக விடுதலைப் போராட்ட நடனம்

தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.

அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர் நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.

தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.