ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"WTOவின் புதிய ஒப்பந்தம் மேற்குலக நாடுகளுக்கே நன்மை செய்யும்"

WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட 160 நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் புதிய சர்வதேச ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கே அதிக நன்மைகள் செய்யும் என்றும், இந்த புதிய ஒப்பந்தம் காரணமாக இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு உணவுமானியம் தவிர்த்த மற்ற துறைகளில் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் கூறுகிறார் சென்னைப் பல்கலைக்கழக பொருளாதார புள்ளியியல் துறை பேராசிரியர் ஆர் சீனிவாசன்