வேகமாகப் பரவும் மருந்தால் குணமாகாத காசநோய்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மருந்தால் குணமாகாத காசநோய் - காணொளி

காசநோய் - எக்கணமும் வெடிக்ககூடிய ஒரு வெடி குண்டாக இது விபரிக்கப்படுகின்றது.

மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இந்தச் சுவாச நோய், அதற்கு சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் பல முக்கிய மருத்துகளாலேயே குணமாகாத ஒரு நிலையைப் (ஒரு வடிவத்தை) பெற்றிருக்கிறது.

இந்த வகையில் இதுவரை பயன்படுத்தப்படும் மருந்துகளாலேயே குணமாக்க முடியாத காசநோயால் உலகெங்கும் கடந்த வருடத்தில், 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இது குறித்து மும்பையின் தாராவியில் பிபிசி செய்தியாளர் துலிப் மசும்தார் வழங்கும் காணொளி. தமிழில்..