ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: சீனாவின் ஆளில்லா விண்கலன் நிலாவில் தரையிறக்கம்

சீனா, அதன் விண்வெளித் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக ஆளில்லாத விண்கலன் ஒன்றை நிலாவில் தரையிறக்கியுள்ளது.

chang-er-three என்ற இந்த விண்கலன் நிலாவின் தரையை தொட்டவுடன், பீஜிங்கில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் எழுப்பிய காட்சிகள் அரச தொலைக்காட்சியில் நேரடியாக காண்பிக்கப்பட்டன.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், முதற்தடவையாக விண்கலனொன்று நிலாவில் தரையிறங்கியுள்ளது.

தரையிறங்கிய விண்கலனிலிருந்து, நிலாவின் வானவில் குடா என்றழைக்கப்படும் பகுதியில் தரையில் ஆய்வுகளை நடத்துவதற்காக 6 சக்கர உலாவியொன்றை உலாவவிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.