ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெஹிவளை பள்ளிவாசல் மீது கல்வீச்சு

Image caption கொழும்பில் முன்னர் தாக்கப்பட்ட ஒரு பள்ளிவாசல்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தேஹிவளையில் தொழுகை நடத்தப்படக் கூடாது என்று பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களில் ஒன்று நேற்று கல்வீச்சுக்கு உள்ளானது.

தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.

கடந்த செவ்வாய் காலை தொழுகை நேரத்துக்கு சற்று முன்னர் காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் தொழுகையை நடத்த வேண்டாம் என்று சொல்லியதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் முறையான அனுமதியை பெறவில்லை என்று பொலிஸார் கூறியதாகவும், ஆனால் தாம் முறையான அனுமதியை பெற்றிருப்பதாகவும் தெஹிவளை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளரான முஹமட் தாஹிர் மௌலவி பிபிசியிடம் இன்று கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பாக தாம் சட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம்.